ஏறாவூர் நகர பிரதேசத்திலுள்ள கலையாற்றல் மிக்க பல்துறைக் கலைஞர்களுக்கு கத்தரி மற்றும் மிளகாய் நாற்றுக்களை வழங்கும் நிகழ்வு ஏறாவூர் நகரில் இடம்பெற்றது.
உணவுப் பஞ்சத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் உப உணவுப் பயிர் உற்பத்தியைப் பெருக்குவதற்காக இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக இதன்போது விவசாய போதனாசிரியை முர்சிதா சிரீன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மீனவ ஒத்துழைப்பு அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹபீப் முஹம்மது பாத்திமா சர்மிலா உட்பட விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள்; பயனாளிகள் கலந்து கொண்டனர்.
ஏறாவூர் நகர விவசாய விரிவாக்கல் பிரிவில் வீட்டுத் தோட்ட விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பெண்களுக்கான மரக்கறிப் பயிர் நாற்றுக்கள் பழ மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.