ஏறாவூர் அல் அஷ்கர் மகளிர் உயர்தரப் பாடசாலையில் கௌரவிப்பு நிகழ்வு பாடசாலை பிரதான மண்டபத்தில் கல்லூரி அதிபர் எம்.ஐ.எம். நசீர் தலைமையில் இடம் பெற்றது.
சாதாரண தரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் அதி விசேட சித்திகளை பெற்ற மாணவிகள், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்கள், மற்றும் எறிபந்து போட்டியில் தேசிய ரீதியில் சாதித்த மாணவார்கள் கௌரவிக்கப்பட்டனர்.
பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் திருமதி றிப்கா மற்றும் எம்.எச்.எம். ரமீஸ், ஆகியோருடன் ஏறாவூர் நகர சபை செயலாளர் எம்.எச்
எம். ஹமீம் முன்னாள் நகர முதல்வர் நழிம், உட்பட பலரும் கலந்து கொண்டனர்