28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஏழு புதிய தூதுவர்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி

வெளிநாட்டுத் தூதுவர்களாகச் பணியாற்ற இலங்கை அரசாங்கத்தால் பெயரிடப்பட்ட ஏழு புதிய தூதுவர்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் பாராளுமன்றக் குழு அறையில் உயர் பதவிகள் பற்றிய குழு நேற்றுக் கூடியது.

இதன்போது ஏழு புதிய தூதுவர்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, அஹமட்.ஏ.ஜவாட் சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும், அருனி ரணராஜா நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவராகவும், தர்ஷன பெரேரா சுவீடனுக்கான இலங்கைத் தூதுவராகவும், எம்.கே.பத்மநாதன் எகிப்துக்கான இலங்கைத் தூதுவராகவும் நியமிப்பதற்கான அனுமதி இதன்போது வழங்கப்பட்டது.

மேலும், எஸ்.டி.கே.சேமசிங்ஹ போலாந்துக்கான இலங்கைத் தூதுவராகவும், சி.ஈ.சமிந்த.ஐ.கொலன்னே தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவராகவும், எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராகவும் நியமிப்பதற்கான அனுமதியும் இதன்போது வழங்கப்பட்டது.

சமல் ராஜபஷ, நிமல் சிறிபால டி. சில்வா, தினேஷ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன, கெஹலிய ரம்புக்வெல, ரமேஷ் பத்திரண, சுதர்ஷனி பெர்னாண்டோ, புள்ள, விதுர விக்கிரமநாயக்க, அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles