இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மார்ச் 1 ஆம் திகதி முதல், புறப்படுவதற்கு முன்னர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டிய அவசியமில்லை என சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளப்பட்டமைக்கான அட்டையை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் பயணிகள் வைத்திருத்தல் அவசியமாகும் என்று அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள் 48 மணித்தியாலங்களுக்குள் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை வைத்திருத்தல் அவசியமாகும்.
எனினும் முழுமையான கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பி.சி.ஆர் மற்றும் ரபிட் அண்டிஜன் பரிசோதனைகள் அவசியமில்லை என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.