ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின், அம்பாறை அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச தேர்தல் காரியாலயம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மாவட்ட செயலாளர் க.வசந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வேட்பாளர்களான சோ.புஸ்பராசா, சுப்ரமணியம் தவமணி, ஆகியோரும் கிழக்கு தமிழர் ஒன்றிய செயலாளர் ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் வா.குணாளன் ஆலையடிவேம்பு பால் பண்ணையாளர்கள் சங்க தலைவர் எஸ்.விக்னேஸ்வரன், வம்மியடிகுள மீன்பிடிசங்கத்தலைவர் ஆ.பேரின்பராசா உட்பட பெருமளவான பொது மக்களும் கலந்து கொண்டனர்.