29 C
Colombo
Tuesday, October 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஐ.சி.சி மகளிர் ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணி உலக சம்பியனாக தெரிவு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற 9ஆவது ஐ.சி.சி மகளிர் ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணி வெற்றிபெற்று உலக சம்பியனாக தெரிவாகியது. நேற்று இரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை 32 ஓட்டங்களால் வெற்றிகொண்ட நியூஸிலாந்து முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இரண்டு அணிகளும் முதல் தடவையாக ஐ.சி.சி மகளிர் ரி-20 உலகக் கிண்ணத்தை சுவீகரிக்க வேண்டும் என்ற நோக்கோடு போட்டியை எதிர்கொண்டன. அந்த வகையில் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது.

நியூஸிலாந்து அணி சார்பில் அமிலா கீர் 43 ஓட்டங்களையும் புரொட் கெலிடே 38 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் நொன்குலுலேக்கோ மிலாபா 02 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 159 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது. அவுஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக லாரா 33 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் அமேலியா கேர், ரோஸ்மேரி மாய்ர் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகியாக அமேலியா கேர் தெரிவுசெய்யப்பட்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles