மட்டக்களப்பு செங்கலடி காயன்குடா பிரதான வீதி கார்ப்பெட் வீதியாக புனரமைக்கப்பட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனால் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் 149 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த வீதியானது புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் செயலாளர் பற்குணம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிராம முக்கியஸ்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், முற்போக்கு கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்,
“ஒருசில தமிழ் கட்சிகள் மட்டும் தமிழ் பொதுவேட்பாளரை தீர்மானிக்கமுடியாது எனவும் தமிழ் மக்களை எந்த கட்சிக்கும் எழுதிக்கொடுக்கப்படவில்லையென” என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.