உலர் வலயத்திற்குட்பட்ட மொனராகலை, அம்பாறை, பதுளை போன்ற பிரதேசங்களில் 100,000 ஏக்கர் இறப்பர் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை தொழில்நுட்ப ரீதியாக குறிப்பிடப்பட்ட இறப்பர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கைத்தொழில்துறையினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறப்பர் உற்பத்தி
அத்தோடு, இலங்கையில் வருடாந்த இயற்கை இறப்பர் உற்பத்தியை 60 வீதத்தால் அதிகரிக்கும் நோக்கில் இறப்பர் பயிர்ச்செய்கை பெருந்திட்டம் அடுத்த சில வருடங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இறப்பர் தற்போது உற்பத்தி திறனில் 30 சதவீதத்தை பயன்படுத்தி வருவதாகவும் மற்றும் ஓட்ஸ் பற்றாக்குறையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.