யாழ். புகையிரத மார்க்கத்தின் வழியாக பயணித்துக்கொண்டு இருந்த புகையிரதத்தில் ஏற முற்பட்ட பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகியதில் அவரது ஒரு கால் முற்றாக சிதைவடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து நேற்று (07) இரவு கொழும்பு நோக்கி புறப்பட்ட இரவு தபால் புகையிரதத்தில் ஏற முற்பட்ட வேளை, தவறி விழுந்ததில் புகையிரதத்திற்கும், புகையிரத மேடைக்கும் இடையில் கால் அகப்பட்டுள்ளது.
அதனால் யுவதியின் கால் முற்றாக சிதைவடைந்த நிலையில் , அவரை மீட்டு, யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
குறித்த யுவதி குருநாகல் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, சொந்த இடத்திற்கு திரும்ப புகையிரதத்தில் ஏற முற்பட்ட போதே விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.