ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுனியா – யாழ்ப்பாணம் வீதியில், கெப் வண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்து சனிக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.
ஓமந்தை நகரில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கெப் வண்டி, எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் பாதசாரி மீது மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் ஓமந்தை வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் ஆவார்.
சடலம் வவுனியா வைத்தியாசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக கெப் வண்டி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.