டான் தொலைக்காட்சிக் குழுமத்தின், ஓம் தொலைக்காட்சியால் நடத்தப்படும், ‘சைவம் தழைத்தோங்க’ நிகழ்வின், 2 ஆம் நாள் நிகழ்வு, இன்று மாலை இடம்பெற்றது.
இன்றைய நிகழ்வில், சாதனைத் தமிழன் ஆறு.திருமுருகன் பங்கேற்றார்.
யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் தலைமையில், இந்த போட்டி நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ காலப் பகுதியில், சைவ சமயத்தை வளர்க்கும் விதமாக, ஓம் தொலைக்காட்சியால் நடத்தப்படும், ‘சைவம் தழைத்தோங்க’ நிகழ்வு, இம்முறையும் இடம்பெறுகின்றது.
பாடசாலை மாணவர்களிடையே, சைவ சமய அறிவை மேம்படுத்தும் நோக்குடன், ‘சைவக்களஞ்சியம்’ எனும் தலைப்பில், சமய அறிவுப் போட்டி நடாத்தப்படுகிறது.
அந்தவகையில், ‘சைவம் தழைத்தோங்க’ நிகழ்வு, நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய சுழலில், வட கிழக்குத் மூலையில் அமைந்துள்ள, நடராஜர் பரமேஸ்வரி மண்டபத்தில், நிகழ்வு இடம்பெறுகின்றது.
பங்குபற்ற விரும்பும் மாணவர்கள், தங்கள் பெயர், பாடசாலை வகுப்பு, தொலைபேசி இலக்கம் என்பவற்றைக் குறிப்பிட்டு, முகாமையாளர், ஓம் தொலைக்காட்சி, இலக்கம் 707, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு, விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.
அத்துடன், 077 17 13 598 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி, பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
போட்டிகள், நடராஜர் பரமேஸ்வரி மண்டபத்தில், மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகும்.
எனவே பங்குபற்ற விரும்பும் மாணவர்கள், மாலை 6.00 மணிக்கு முன்னதாக வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
போட்டிகளில் பங்கு கொள்ளும் மாணவர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.