ஓய்வு பெற்ற மருத்துவர்களை மீள பணிக்கு அழைக்க வேண்டும் – வஜிர

0
159

இடம்பெயர்வு காரணமாக அதிகளவான வெற்றிடங்கள் காணப்படும் வைத்தியசாலைகளில் பணிபுரிய ஓய்வுபெற்ற வைத்தியர்களை உடனடியாக மீள அழைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய வஜிர அபேவர்தன, காலி கராப்பிட்டிய போன்ற வைத்தியசாலைகளில் அதிகளவான வெற்றிடங்கள் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரிவதற்கு ஓய்வுபெற்ற வைத்தியர்களை உடனடியாக மீள அழைக்க வேண்டும் என்றார்.

‘கராப்பிட்டிய வைத்தியசாலையில் கடமையாற்றிய சுமார் 15 விசேட வைத்தியர்களும், 30 ஏனைய வைத்தியர்களும் அண்மையில் இடம்பெயர்ந்துள்ளதால், பெருமளவிலான வெற்றிடங்கள் உருவாகியுள்ளன. இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், எனவே ஓய்வு பெற்ற மருத்துவர்களை உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும்,’ எனவும் தெரிவித்துள்ளார்.