கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, இன்று காலை கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்ட நிலையில் நிறைவடைந்தது.

திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது.
நேற்று மாலை கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.

இவற்றில் இலங்கையை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவிலிருந்து பக்தர்கள் எவரும் வருகை தராத நிலையில் 5 அருட்தந்தையர்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.

இன்று காலை கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவிழா நிறைவுற்றது.
இத்திருவிழாவில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், படைப்பிரிவினர், அருட்தந்தையர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய பக்தர்கள் திருழாவைப் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



