லெனடோர பிரதேசத்தில் 2.5 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை வைத்திருந்த ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் உத்தரவுக்கமைய கண்டி பிராந்திய சிரேஷ்ட அத்தியட்சகர் தலைமையில் தம்புள்ளை விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெந்தோர ஏக்கர் காணி பகுதியில் உதயகுமார உள்ளிட்ட அதிகாரிகள் குழு சோதனைகளை மேற்கொண்டது.
அங்கு சட்டவிரோதமாக உலர்த்திய 02 கிலோ 650 கிராம் கஞ்சா வைத்திருந்த லெனடோர பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.