கடன் தொல்லையால் இளம் பெண் தவறான முடிவு!

0
8

கடன் தொல்லை காரணமாக இளங்குடும்பப் பெண் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் யாழ். சித்திரமோடி, இளவாலையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான  அரிச்சந்திரன் வினோதா (வயது 36) என்பவராவார்.

கணவன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் அவர் பலரிடம் கடன் பெற்றுள்ளார். கடன் தொல்லை காரணமாக நேற்று முன் புதன்கிழமை (09) இரவு அவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார்  விசாரணை மேற்கொண்டார். சாட்சிகளை இளவாலைப் பொலிஸார் நெறிப்படுத்தினர்.