டலுடன் கலக்கின்ற நீரை குளத்திற்கு வழங்கி மக்களுடைய விவசாயத்திற்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் பங்காற்ற உதவுமாறு தென்னமரவடி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமாக இருக்கின்ற தென்னமரவடி கிராம மக்கள் அடிப்படை வசதிகள் பல பூர்த்தி செய்யப்படாத நிலையில் அக்கிராமத்தில் வாழ்ந்து வருவதாகவும், வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி மற்றும் விசாயத்தை பல சவால்களுக்கு மத்தியில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
தென்னமரவடி கிராமத்தில் விவசாயத்தை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டுவரும் மக்கள் விவசாயத்திற்கான நீர் இன்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
இந்நிலையில் ஸ்ரீபுர பகுதியில் இருந்து வருகின்ற மேலதிகமான வால்கடவ நீரானது 1 கிலோ மீற்றருக்கு மேலான தூரத்திற்கு பயணம் செய்து தென்னமரவடி பகுதியில் உள்ள கடலுடன் கலக்கின்றது.
குறித்த நீரை மறித்து, 150 மீற்றர் தூரத்தில் உள்ள தென்னமரவடி பறையன்வெளி குளத்திற்கு விடுவதன் மூலம் அதனை அண்டி இருக்கின்ற 50 ஏக்கருக்கு மேற்பட்ட வயல்வெளிகளில் விவசாயம் மேற்கொள்வதோடு, அங்கிருந்து ஏனைய சிறிய குளங்களான அகம்படியான் குளம், போட்டாக்குளம் போன்ற குளங்களை நிரப்பி அங்கிருக்கின்ற 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் இருபோக நெற்பயயிர்ச் செய்கையிலும், உப உணவுப் பயிர்ச்செய்கையிலும், கால்நடை வளர்ப்பிலும் மக்கள் ஈடுபட முடியும். இதைவிட நிலத்தடி நீரையும் அதிகரிப்பதற்கு இது வாய்ப்பாக அமையும்.
அத்துடன் பறையன்வெளி குளத்தில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் உள்ள மா ஓயாவானது சுமார் 4 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்து கொக்கிளாய் களப்புடன் கலக்கின்றது. எனவே குறித்த 50 மீற்றர் தொலைவில் உள்ள மா ஓயாவில் இருந்து பறையன்வெளி குளத்திற்கு நீரை வரவழைக்க முடிந்தால் தென்னமரவடி மக்களின் நீர்ப் பிரச்சினைக்கு முற்று முழுதான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.