உலகின் புதிய பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை முதல் தடவையாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான இந்த போயிங் 787-10 ரக விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருப்பது இதுவே முதல் தடவை என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி எய்ட்கன் ஸ்பென்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் வசந்த குடாலியனகே தெரிவித்தார்.
அமெரிக்க போயிங் விமான உற்பத்தியாளரின் ட்ரீம்லைனர் விமானப் பிரிவின் கீழ் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானம்இ ஒரே நேரத்தில் 337 பயணிகள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு ரோல்ஸ் ரொய்ஸ் இன்ஜின்கள் மூலம் இயக்கப்படும் இந்த விமானம் 36 வணிக வகுப்புகளையும் கொண்டுள்ளது.