போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது பயணிகள் முனையத்தை நிர்மாணிப்பதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு ஜப்பானிய கடன் மூலம் நிதி வழங்கப்படும் என அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த முனையம் 2019 இல் கட்ட திட்டமிடப்பட்டிருந்தாலும், பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த திட்டத்தை அமுல்படுத்த தாமதமானது.புதிய முனையம் வருடாந்தம் 9 மில்லியன் பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது.
தற்போது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பயணிகள் முனையம் ஒரு வருடத்திற்கு 6 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்கிறது.இரண்டாவது முனையத்துடன், விமான நிலையத்தின் திறன் ஆண்டுக்கு 15 மில்லியன் பயணிகளுக்கு சேவையை வழங்கும் வகையில் அதிகரிக்கும் என்றார்.