கணேமுல்ல சஞ்சீவவிடமிருந்து T-56 ரக துப்பாக்கி ஒன்று மீட்பு

0
131

போதைப்பொருள் கடத்தல்காரரான சஞ்சீவ குமார என்றழைக்கப்படும் ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் T-56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

‘கனேமுல்ல சஞ்சீவ’ கடந்த புதன்கிழமை (செப். 13) நேபாளத்தில் இருந்து இலங்கை வந்தடைந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்படும் போது அவரிடம் போலி கடவுச்சீட்டு இருந்ததுடன், அவரை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெமட்டகொட பிரதேசத்தில் வசிப்பவர் என நம்பப்படும் பெண் ஒருவரின் தனிப்பட்ட விவரங்களும் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கருதப்படும் ‘கனேமுல்ல சஞ்சீவ’, பின்னர் நேபாளத்துக்குத் தப்பிச் சென்றதாகவும், பின்னர் அவரைக் கைதுசெய்ய இன்டர்போல் ‘ரெட் வாரண்ட்’ பிறப்பிக்கப்பட்டதன் பேரில் இலங்கை திரும்பியதாகவும் கூறப்படுகிறது.