கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 1,000 நாட்களையும் கடந்துக் கொண்டிருக்கின்ற வேளையில், கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் பொலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது.
அஷ்த்ராகான் பகுதியில் இருந்து இந்த ஏவுகணையை ரஷ்யா ஏவியது தெரியவந்துள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதல் ஆரம்பித்த பிறகு, சக்திவாய்ந்த ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறையாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஏவுகணை 5,000 கிலோ மீற்றர்களுக்கும் மேலாக பறக்கும் திறன் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.