கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்த இளைஞன் மாயம்!

0
74

ஹொரணை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

21 வயதுடைய குறித்த இளைஞன் கடந்த ஜனவரி மாதம் 02 ஆம் திகதி ஜேர்மனியிலுள்ள கப்பல் சேவை ஒன்றில் பணியில் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் கடந்த 18ம் திகதி ஸ்பெய்னில் இருந்து சென்று கொண்டிருந்த கப்பலில் இருந்து குறித்த இளைஞன் கடலில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.