அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும், கமலா ஹாரீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவிற்கு பேரழிவு ஏற்படும் என எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 5ம் திகதி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனநாயகக் கட்சிசார்பில் கமலா ஹாரீஸ் போட்;டியிடுகிறார்.
குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் களமிறங்கியுள்ளார்.
ட்ரம்பிற்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தனது எக்ஸ் தளத்தில், ‘ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் ஜனநாயகத்தையும் அமெரிக்காவையும் காப்பாற்றுவார். கமலா ஹாரீஸ் தெரிவு செய்யப்பட்டால் அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்படும். எனது வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் என எலான் மக்ஸ் பதிவிட்டுள்ளார்.