கரடித் தாக்குதலுக்குள்ளான இளைஞன் பதுளை வைத்தியசாலையில்!!

0
79

கரடி தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .  

புத்தல ,  கதிர்காம பிரதேசத்தை  சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே நேற்று கரடி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.  

குறித்த பிரதேசத்தில் நிலக்கடலை தோட்டத்தில் வேலையிலீடுபட்டிருந்த இளைஞனை  திடீரென கரடி ஒன்று தோட்டத்திற்குள்  புகுந்து அவர்  உடலில் பாய்ந்து தாக்கியதாக  பொலிஸார் தெரிவித்தனர். 

பின்னர் அருகில் இருந்த நண்பர்கள் கரடியை விரட்டியடித்து அவரை பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.