கரையொதுங்கிய இளைஞரின் சடலம் மீட்பு!

0
7

யாழ்ப்பாணம் அச்சுவேலி – அக்கரை கடற்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (07) கரையொதுங்கியது.

வடமராட்சி – கரணவாயைச் சேர்ந்த இளைஞரின் சடலமே நேற்று வியாழக்கிழமை மாலை இவ்வாறு கரையொதுங்கியது.

மீட்கப்பட்ட சடலம் உடற்கூராய்வு பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.