போதைக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்வு இன்று கல்முனை அல்-ஜலால் வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.சாய்புடீன் தலைமை யில் இடம்பெற்றது.
சிவில் சமூகமும், பாடசாலை மாணவர்களும் இணைந்து ஏற்பாடு செய்த போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வில் மாணவர்கள், சிவில் சமூகத்தினர், ஆசிரியர்கள் சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டனர்.
சிறுவர்கள் மத்தியில் பரவி வரும் போதைப்பொருள் பாவனை குறித்து விழிப்புணர்வுடன் இருப்போம், மாணவர்கரளை போதைக்கு அடிமையாக்காதே, சிறுவர்களிடம் போதைப் பொருளை விற்பனை செய்யாதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் பிரதான வீதியூடாக பாடசாலை சென்றடைந்தனர்.விழிப்புணர்வு செயற்பாட்;டில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது மாலிக், கலந்து கொண்டதுடன், பரீட், மாலிக், வைத்தியர்.நியாஸ், எம்.எம்.எம்.றபீக், ஏ.சறூன், ஏ.றசாக் கலந்து கொண்டார்கள்.