களுத்துறையில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் ஒருவர் கைது

0
8

களுத்துறை – மொரகஹஹேன பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் மொரகஹஹேன பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (31) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரகஹஹேன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 101 லீற்றர் 250 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் (135 பீப்பாய்கள் ) , 3,876 லீற்றர்  750 மில்லி லீற்றர்  கோடா (31 பீப்பாய்கள்) மற்றும் 3 எரிவாயு அடுப்புகள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பண்டாரகம பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.