26.1 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

காசாவில் சிக்கித் தவித்த இலங்கைக் குடும்பம் நாடு திரும்பினர்

காசாவில் சிக்கித் தவித்த நான்கு பேர் கொண்ட இலங்கைக் குடும்பம் கடந்த நவம்பர் 24 ஆம் திகதி பத்திரமாக நாட்டை வந்தடைந்தனர்.வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு குடும்பத்தைத் திருப்பி அனுப்புவதற்கு வசதி செய்துள்ளது.நாடு திரும்பிய இலங்கையர்களை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றனர்.கெய்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள், எகிப்திய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு, எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான ரஃபா எல்லைக்கு சென்று சிக்கித் தவித்த இலங்கையர்களை வரவேற்றனர்.புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் (IOM) உதவியுடன் திரும்பியவர்களுக்கான உதவிகள் மற்றும் விமான போக்குவரத்து ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சு செய்தது.2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஏற்பட்ட நெருக்கடியின் தொடக்கத்திலிருந்து கெய்ரோ மற்றும் ரமல்லாவில் உள்ள இலங்கை தூதரகங்களின் ஒருங்கிணைப்பில் காசா பகுதியிலிருந்து மொத்தம் 15 இலங்கையர்கள் ரஃபா எல்லை வழியாக மீட்கப்பட்டு பாதுகாப்பாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles