கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் இன்று பூர்வாங்க விசாரணை முன்னெடுக்கப்பட்டது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 30 பேரிடம் இன்று பூர்வாங்க விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி பிராந்திய அலுவலகத்தில் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் தியாகராஜா யோகராஜா மற்றும் காணாமற் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெகநாதன் தற்பரன் ஆகியோர் தலைமையில் விசாரணை இடம்பெற்றது.