காத்தான்குடி ஆதார வைத்தியசாலை சுகாதார ஊழியர்களினால் ஆர்ப்பாட்டம்

0
153

மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வைத்தியசாலைக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் ,அறுவை சிகிச்சைகள் சிறப்பாக நடைபெற வேண்டும் சுகாதார ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் ,அதிகரிக்கப்பட்ட வரிக்
கொள்கை நீக்கப்பட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீலங்கா ஜனரக சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் துரைசிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.