காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி

0
289

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் உள்ள காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலய, இல்ல விளையாட்டுப் போட்டி
நேற்றைய தினம் பாடசாலை மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் ஏ.எல்.எம்.பாறூக் தலைமையில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர் கலந்து கொண்டார்.

விளையாட்டுப் போட்டியில் மார்ஸ் இல்லம் 269 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினையும் வீனஸ் இல்லம் 219 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தையும்
ஏர்த் இல்லம் 213 புள்ளிகள் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
மாணவர்களின் உடற் பயிற்சி கண்காட்சி உட்பட பல்வேறு மைதான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.