கார் விபத்தில் இருவர் பலி!

0
6

மஹியங்கனையில் இருந்து ஒக்கம்பிட்டிய நோக்கி வியானி கால்வாய்க்கு இணையாக உள்ள வீதியில் பயணித்த கார், செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை   மபாகட 17வது கட்டை பகுதியில் வைத்து  கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவரும் உயிரிழந்ததாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் தற்போது மஹியங்கனை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.