தமது வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் 5 மில்லியன் ரூபாய் பணம் தொடர்பில் காவல்துறை முன்னெடுக்கும் விசாரணைக்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 11ஆம் திகதி வணிக நிதி செயற்பாடுகளின் போது மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த 5 மில்லியன் ரூபாய் பணம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் உடனடியாக உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுதவிர, கொழும்பு – கோட்டை காவல்துறையினரும் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இந்தநிலையில், காவல்துறை விசாரணைக்கு அவசியமான ஒத்துழைப்பை தொடர்ச்சியாக வழங்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணைகளையும் துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.