கிறிஸ்த மாநாட்டுக்கு, மட்டு.இந்துக் கல்லூரி மைதானத்தை வழங்குமாறு மட்டக்களப்பில் உண்ணாவிரதம்!

0
176

மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில், கிறிஸ்தவ மாநாடு இடம்பெறுவதற்கு, அனுமதி மறுக்கப்பட்டமையைக் கண்டித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்றது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்த மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், எதிர்வரும் திங்கட் கிழமை, அரச அதிகாரிகள், மத போதகர்களுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தித் தருவதாக வழங்கிய வாக்குறுதிக்கமைய உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.

தமது மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டால், கிறிஸ்தவ தமிழ் சமூகம், அரசியல் ரீதியில் தனித்துச் செயற்படும் முடிவு எடுக்கப்படலாம் என்று போராட்ட இடத்திலிருந்த ஒருவர் எமது செய்திப் பிரிவுக்கு கருத்து வெளியிட்டார்;.