உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சி இயக்கச்சி நகர் பகுதியில், இன்று சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.பயனுறுதி மிக்க நிலப் பயன்பாட்டின் ஊடக நலம் நிறைந்த நாடு எனும் தொனிப்பொருளில், வடக்கு மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் மகேஷ் ஜல்தோட்ட தலைமையில், இயக்கச்சியை அண்டிய பகுதிகளில், சிரமதானம் இடம்பெற்றது.

இதன் போது, வடிகான்கள், வீதியோரங்கள் போன்ற இடங்களில் தேங்கிக் காணப்பட்ட கழிவுகள் அகற்றப்பட்டன.இதில், மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சுற்றாடல் கழக மாணவர்கள் பங்கேற்றனர்.


