கிளி. கல்லாறில் மணல் அகழ்வு…!

0
107

கிளிநொச்சி – கல்லாறு பகுதியில் மணல் அகழ்வுக்கு அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர், டிப்பர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தருமபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக, பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், கல்லாறு பகுதியில் அனுமதி பாத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த நான்கு டிப்பர்களும், அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், தடையப் பொருட்களை எதிர்வரும் பத்தாம் திகதி கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தருமபும பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி
தெரிவித்துள்ளார்.