இலங்கை இரட்சணிய சேனையின் கிழக்கு பிராந்திய இரட்சணிய சேனையின் வருடாந்த பெண்கள் ஐக்கிய மகாநாடு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மன அழுத்தங்களுக்குட்பட்டுள்ள பெண்களின் மனநிலையினை மாற்றும் வகையில் 2024ம் ஆண்டுக்கான இலங்கை இரட்சணிய சேனையின் பெண்களுக்கான விழிப்புணர்வு ஐக்கிய மகாநாடு இடம்பெற்றது
மட்டக்களப்பு இரட்சணிய சேனையின் மேஜர் சிறிவதி புவனேந்திரன் தலைமையில் நடைபெற்ற 2024ம் ஆண்டுக்கான பெண்கள் ஐக்கிய மகா நாட்டில், பாகிஸ்தான் நாட்டின் இரட்சணிய சேனையின் பிரதான காரியதரிசி கேணல் நிஹோட் இம்ரான், இந்திய நாட்டின் இரட்சணிய சேனையின் பிரதான செயலாளர் கேணல் அண்ணமணி பொட்டு, அம்பாறை இரட்சணிய சேனையின் படைஸ்தல மஜேர் பேல் விஜேதுங்க, கொழும்பு இரட்சணிய சேனையின் படைஸ்தல மேஜர் வஜிர குமார, மட்டக்களப்பு இரட்சணிய சேனையின் படைஸ்தல மேஜர் புவனேந்திரன் மற்றும் மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் அம்பாறை ஆகிய இரட்சணிய சேனையின் படைஸ்தல பெண்கள் கலந்துகொண்டனர்.