கிழக்கு மாகாணத்திலுள்ள லயன்ஸ் கழகங்கள் ஒன்றிணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

0
87

கிழக்கு மாகாணத்திலுள்ள லயன்ஸ் கழகங்கள் ஒன்றிணைந்து மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் அண்மையில் பெய்த மழை வெள்ளத்தினால்
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கின.
தெரிவு செய்யப்பட்ட 150 குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள்
வழங்கப்பட்டன.
இன்றைய தினம் லயன்ஸ் கழகத்தின் நிவாரணப் பணியின் கீழ் அம்பாறை மாவட்டத்திலும் வவுணதீவு, வாகரை பிரதேசத்திலும் 600 குடும்பங்களுக்கு இந்
நிவாரணம். வழங்கப்பட்டது.
நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் என். சத்தியானந்தி, லயன்ஸ் கழக ஆளுனர் ஸ்மத் ஹமீத் மற்றும் லயன்ஸ் கழக மாவட்ட பிரதிநிதிகள் என பலர்
கலந்து கொண்டனர்.