கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் காத்தான்குடிக்கு விஜயம்

0
207

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மட்டக்களப்பு காத்தான்குடி அல் அக்ஸா ஜும்மா பள்ளிவாயலுக்கு விஜயம் செய்தார்.


ஆளுநர் செந்தில் தொண்டமானை பள்ளிவாயல் நிர்வாகத்தினர் வரவேற்றதுடன், காத்தான்குடி நகர சபையின் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌவித்ததுடன், அல் அக்ஸா ஜும்மா பள்ளிவாயிலின் பிரதம இமாம் மௌலவி ஆதம்லெவ்வை,
பள்ளிவாயல் தலைவர் கே.எல்.எம் பரீட் ஆகியோர் இணைந்து புனித அல்குர்ஆன் இன் பிரதி ஒன்றினையும் ஆளுநரிடம் கையளித்தனர்.


இன நல்லுறவுக்கு அல் அக்ஸா ஜும்மா பள்ளிவாயல் ஒரு தளமாக இருப்பதாக ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.


அத்துடன், காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள ஈச்ச மரங்களையும் ஆளுநர் பார்வையிட்டார்.


நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதர், கிழக்கு மாகாண சுற்றுலா சபையின் தலைவர் ஏ.பி மதன், காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி ரிப்கா ஷபீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.