கிழக்கு மாகாண பறங்கியர் சங்கத்தின் ஏற்பாட்டில், பறங்கியர் சமூகத்தின் பாரம்பரிய கலை,கலாசாரத்தை முன்னிலைப்படுத்தி, கலை,கலாசார நிகழ்வின் இறுதி நிகழ்வு நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.
பறங்கியர் சமூகத்தின் கலை, கலாசார நிகழ்வுகள் ஜூலை 21ம் திகதி முதல் நடைபெற்று வந்த நிலையில், நேற்றைய தினம், இறுதி நாள் நிகழ்வு, மட்டக்களப்பு
பறங்கியர் சங்கத்தின் தலைவர் டெர்ரி ஸ்டாக்ஸ் தலைமையில், மட்டக்களப்பு கல்லடி டச் பார் இக்னேசியஸ் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். சிறப்பு அதிதிகளாக அருட்தந்தை ரோசைரோ அடிகளார், அருட்தந்தை நவரெட்னம் அடிகளார், கல்லடி 243 வது இராணுவ படைப்பிரிவு கட்டளை அதிகாரி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க மற்றும் அருட் தந்தையர்கள் ,பறங்கியர் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.