கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு விழா, பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலைகள் சாதனை..!

0
251

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான எல்லே போட்டியில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட காயன்குடா கண்ணகி வித்தியாலயம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.

மகளிருக்கான எல்லே போட்டியின் இறுதிப் போட்டி மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பகுதியான இராணமடு இந்து வித்தியாலயமும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட காயன்குடா கண்ணகி வித்தியாலயமும் மோதின.

இப்போட்டியில் காயன்குடா கண்ணகி வித்தியாலயம் சம்பியனானது.

மாகாண மட்ட எல்லே போட்டியில், மூன்றாவது இடத்தை, மண்டூர் மகா வித்தியாலயம் பெற்றுக்கொண்டது.
முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்ட பாடசாலைகள், பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.