கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மற்றும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்க ஆகியோர் இன்று மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அலுவலவலக்துக்கு விஜயம் மேற்கொண்டு,
சம்மேளன பிரதிநிதிகளை சந்தித்தனர்.
சம்மேளனத்தின் அழைப்பின் பேரில், இச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் பொறியியலாளர் தௌபீக் தலைமையில் சந்திப்பு இடம் பெற்றது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயற்பாடுகள் தொடர்பில், பாதுகாப்புத்துறையின் முக்கியஸ்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாம் பிரிகேடியர் சந்திம குமாரசிங்க உட்பட ராணுவ பொலிஸ் அதிகாரிகளும் சந்திப்பில் கலந்து கொண்டனர்
சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் மௌலவி இல்ஹாம் உட்பட சம்மேளன பிரதி தலைவர் சத்தார் உட்பட பிரதிநிதிகளும் சந்திப்பில் பங்கேற்றனர்.