கிழக்கு மாகாண விவசாய திணைக்கள உத்தியோத்தர்கள் இடையில் நடாத்தப்பட்ட சினேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி
நேற்று மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு விவசாய திணைக்களம் ஒன்பது விக்கட்டுகளால் வெற்றி பெற்று
மாகாண விவசாய திணைக்கள சவால் கிண்ணத்தை சுவிகரித்துகொண்டது. போட்டியில் மட்டக்களப்பு, அம்பாறை ,திருகோணமலை ஆகிய விவசாய திணைக்களங்கள்
மற்றும் மாகாண பிரதி பணிப்பாளர் அலுவலகம் உட்பட நான்கு தினைக்களங்கள் பங்குபற்றிய போட்டிகளில் இறுதி போட்டிக்கு தெரிவான திருகோணமலை
பிரதி விவசாய பணிப்பாளர் காரியாலயம் மற்றும் மட்டக்களப்பு விவசாய திணைக்களம் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில்
முதலில் துடுப்பெடுத்தாடிய திருகோணமலை பிரதி விவசாய பணிப்பாளர் காரியாலய அணி 7 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுக்களை இழந்து
46 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு விவசாய திணைக்கள அணி 2.5 ஓவர்கள் முடிவில் 01 விக்கட்டினை இழந்து
51 ஓட்டங்களை பெற்று ஒன்பது விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.
சுற்றுப்போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு வெற்றிக்கின்னங்களும் சான்றிதழ்களும் வங்கி வைக்கப்பட்டன.
Home கிழக்கு செய்திகள் கிழக்கு மாகாண விவசாய திணைக்கள உத்தியோத்தர்களுக்கு இடையில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி