Home உள்நாட்டு குரங்கு ஏற்றுமதி! இலங்கை-சீனா இடையில் உடன்படிக்கையில்லை: பந்துல குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பாக, இலங்கை அரசாங்கம், சீன அரசாங்கத்துடன் எவ்வித உடன்படிக்கையையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.சீனாவில் உள்ள தனியார் நிறுவனமொன்றினால் ஆயிரம் மிருகக்காட்சிசாலைகளுக்கு தேவையான குரங்குகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் விவசாய அமைச்சரிடம் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களுடன் கலந்தாலோசித்து இவ்வாறான வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியுமா? என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக விவசாய அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் குறிப்பிட்டார்சீன அரசிடம் இலங்கையை விட கடுமையான சட்ட அமைப்பு உள்ளது.
உயிருள்ள விலங்குகளை இறைச்சிக்காக ஏற்றுமதி செய்வதற்கு எந்த அரசும் அனுமதி வழங்குவதில்லை. அரசாங்கங்களுக்கிடையில் அவ்வாறான கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை.தனியார் நிறுவனம் ஒன்றினால் இவ்வாறான பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.