ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவில் நாட்டிலுள்ள வருமானம் குறைந்த மக்களுக்கு இலவச அரிசு வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாவட்டத்தின் பிரதான நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிக்காந்த், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன்,உதவி பிரதேச செயலாளா திருமதி சுபாகரன், உட்பட பலரும் கலந்துகொண்டனர்.