கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அரலிய பிரதேசத்தில் கடந்த 01 ஆம் திகதி கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கல்கிஸ்ஸை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (04) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 46 மற்றும் 47 வயதுடைய இரண்டு பெண்களும் 16 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்களும் ஆவர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கல்கிஸ்ஸை – அரலிய பிரதேசத்திற்கு கடந்த 01 ஆம் திகதி சென்ற கும்பல் ஒன்று இரண்டு நபர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் மொரட்டுவை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.