கென்யாவில் பயங்கரம்: மாணவர் விடுதியில் தீ விபத்து- 17 பேர் பலி

0
65

ஆபிரிக்க நாடான கென்யாவில், பாடசாலை மாணவர்கள் தங்கியிருந்த விடுதியொன்றில், தீ விபத்து ஏற்பட்டதில் 17 மாணவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
நேற்றிரவு இத் தீ விபத்துச் சம்பவித்துள்ளது.

13 மாணவர்கள் பலத்த தீக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் பிரிவினர், தீயைக் கட்டுப்படுத்திய தோடு, மாணவர்களையும் பாதுகாப்பாக மீட்டனர். காயமடைந்த மாணவர்கள் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.