கைக்கடிகாரத்துக்குள் 3 போதைப்பொருள் பொதிகளை மறைத்து வைத்திருந்தவர் கைது!

0
161

மொரகஹஹேன பொலிஸ் பிரிவின் ஒலுபொதுவ பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது போதைப்பொருள் கடத்தும் புதிய முறை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் ஹெரோயின் பொதிகளை கொண்டு செல்வதாக மொரகஹஹேன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபரைக் கைது செய்து  சோதனைக்கு உட்படுத்திய போதிலும் போதைப்பொருள் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து, சந்தேக நபரின்  கைக்கடிகாரத்தின் பின்  பகுதியை அகற்றியபோது, மூன்று போதைப்பொருள் பொதிகளைப்  பொலிஸார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் பல்வேறு பகுதிகளுக்கு போதைப்பொருள் பொதிகளை விநியோகித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் பணத்துக்காக பெண்களை விற்பனை செய்யும் இடமொன்றின் முகாமையாளர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 மொரகஹஹேன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.