கொட்டிகாவத்தை பகுதியில் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் கைது!

0
5

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கொட்டிகாவத்தை பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடுவலை, கொரதொட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவராவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து  13 கிலோ 372 கிராம் ஹெரோயின் மற்றும் 3 கிலோ 580 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.  

குறித்த சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.