கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கைது!

0
55

இந்தியா – குஜராத் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 இலங்கையர்கள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவலை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி புன்சர அமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.