25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனாத் தொற்றினைக் கண்டறியும் செயலியை உருவாக்கிய இலங்கையர்!

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ரிகல் இன்ஜினீயரிங் துறையில் இணை பேராசிரியராக பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த உடாந்த அபேவர்த்தனே என்பவர் தனது குழுவினருடன் இணைந்து, கொரோனோ வைரஸ் தொற்றுநோயைக் கண்டுபிடிக்கும் செல்போன் செயலிக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். அதனடிப்படையில் ‘ரெஸ்ஆப்’ என்ற செயலியை அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனை சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலியானது, கொரோனாவை மட்டுமின்றி ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி போன்ற சுவாச வியாதிகளையும் கண்டுபிடிக்கும் தன்மையுடையது. இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், காய்ச்சல் போன்ற எளிய அறிகுறிகளைக் கொண்டே ஒருவருக்கு கொரோனா போன்ற நோய் ஏற்பட்டிருக்கின்றதா, அது எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதை இந்த செயலி மூலம் அறிந்துகொள்ளமுடியும் என்று கூறப்படுகிறது. இந்த செயலி 92 சதவீதம் துல்லியமான முடிவுகளை வெளியிடுவதாக இதை உருவாக்கியுள்ள நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய உயிர் மருத்துவ தொழில் நிறுவனமான பைசர், இந்த செயலியை விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பல்வேறு கட்ட பரிசோதனைகள், மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்புகளின் ஒப்புதலுக்குப் பின்னரே இந்த செல்போன் செயலி வெளிப் பயன்பாடிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles